/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல்
/
மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல்
ADDED : செப் 02, 2024 01:58 AM
பெ.நா.பாளையம்;பெட்டதாபுரம் அரசு நடுநிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல் நடந்தது.
இதில், பார்வையாளராக நரசிம்மநாயக்கன்பாளையம் பள்ளி ஆசிரியர் ரகுநாதன் கலந்து கொண்டார்.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மதியழகன் வரவேற்றார். பள்ளி ஆசிரியர் திருநாவுக்கரசு, பள்ளி மேலாண்மை குறித்து விளக்கினார். ஆசிரியர் ஆனந்தகுமார், மேலாண்மை குழு கடமைகளை எடுத்து கூறினார்.
நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உட்பட, 24 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி ஆசிரியர்கள் கீதா, குமரேசன், மோகனப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்வியாளர் ரங்கசாமி உள்ளிட்ட, 45க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் நந்தினி நன்றி கூறினார்.