/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக்கூட்டம் புதிய உறுப்பினர்கள் தேர்வு
/
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக்கூட்டம் புதிய உறுப்பினர்கள் தேர்வு
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக்கூட்டம் புதிய உறுப்பினர்கள் தேர்வு
பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக்கூட்டம் புதிய உறுப்பினர்கள் தேர்வு
ADDED : ஆக 13, 2024 01:41 AM

- நிருபர் குழு -
உடுமலை ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு புதிய உறுப்பினர்கள் தேர்வு நடந்தது.
மாநில அளவில், அரசு பள்ளிகளில் பள்ளிமேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம், குறிப்பிட்ட நாட்களில் நடத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், உடுமலை ஒன்றியம் ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. ஆசிரியர் கண்ணபிரான் வரவேற்றார். ஊராட்சித்தலைவர் சுமதி முன்னிலை வகித்தார்.
பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயா, மேலாண்மை குழுவின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து பெற்றோருக்கு விளக்கினார். பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், குறித்தும் பெற்றோருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ராகல்பாவி பள்ளி தலைமையாசிரியர் தாரணி பள்ளி மேலாண்மைக்குழுவில் பெற்றோரின் கடமை குறித்து பேசினார். தொடர்ந்து அரசு பள்ளிகளின் வளர்ச்சி குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டன. பள்ளி மேலாண்மை குழுவின் தலைவராக சங்கீதா, துணைத்தலைவராக பிரியா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில், இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர், முன்னாள் மாணவர்கள் உட்பட பள்ளி மேலாண்மைக்குழுவினர்களாக, 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு, மாநில அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குழு உறுப்பினர் கோணீஸ்வரி நன்றி தெரிவித்தார்.
வால்பாறை
வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்புக்கூட்டம் தலைமை ஆசிரியர் ரஞ்சித்குமார் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக சூரியா, துணைத்தலைவராக கண்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பார்வையாளராக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், கவுன்சிலர் ரவிசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* லோயர்பாரளை எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் பாஸ்கர், துணைத்தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* சோலையாறு எஸ்டேட் முதல் பிரிவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் அருண் தலைமை வகித்தார். பார்வையாளர் கிராம நிர்வாக அலுவலர் லெனின் முன்னிலையில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டனர்.