/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள்...ஏறக்குறைய தயார்! தொகுதிவாரியாக ஊழியர் நியமனம்!
/
மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள்...ஏறக்குறைய தயார்! தொகுதிவாரியாக ஊழியர் நியமனம்!
மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள்...ஏறக்குறைய தயார்! தொகுதிவாரியாக ஊழியர் நியமனம்!
மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள்...ஏறக்குறைய தயார்! தொகுதிவாரியாக ஊழியர் நியமனம்!
ADDED : ஏப் 16, 2024 02:09 AM

கோவை;அதோ, இதோ என்று இன்னும் மூன்று நாட்களில் தேர்தல் நடக்கப்போகிறது. தேர்தல் நடத்துவதற்கான பணிகளில், கலெக்டர் தலைமையிலான மாவட்ட தேர்தல் ஆணையம் இரவும், பகலும் கூட்டங்கள், பயிற்சிகள் நடத்தி தயார் நிலையில் உள்ளது.
கோவையில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்திய இதர பொருட்களை திரும்ப பெறுவதற்கான குழு, சட்டசபை தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டு உள்ளது.
கோவை லோக்சபா தொகுதியில், 2,059 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் இரு நாட்களே இருக்கின்றன. ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்கள், சென்னையில் இருந்து தருவிக்கப்பட்டு, அந்தந்த சட்டசபை தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
அங்கிருந்து, 18ம் தேதி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வரவேற்புக்குழு தயார்
19ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்ததும், அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில், இயந்திரங்கள் 'சீல்' வைக்கப்படும்.
பின், மண்டல அலுவலர்கள் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் வரும் லாரியில், ஓட்டுப்பதிவான இயந்திரங்களையும், இதர பொருட்களையும் ஒப்படைக்க வேண்டும். மண்டல குழுவினர், அவர்களுக்கு ஒதுக்கியுள்ள ஓட்டுச்சாவடிகளுக்குச் சென்று, இயந்திரங்களை பெற்று, பாதுகாப்பாக, ஓட்டு எண்ணும் மையமான, ஜி.சி.டி., கல்லுாரிக்கு எடுத்து வருவர்.
கல்லுாரியில், மண்டல அலுவலர்களிடம் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்திய பொருட்களையும் பெறுவதற்கு, வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தனித்தனியாக எட்டு டேபிள்கள் மற்றும் சிறப்பு கவுன்டர் அமைக்கப்படுகிறது.
ஒவ்வொரு டேபிளிலும் யார், யார் நிற்க வேண்டும் என ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, உத்தரவு வழங்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு டேபிளிலும் என்னென்ன வேலை செய்ய வேண்டும் எனவும் பிரிக்கப்பட்டு, பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர, கூடுதலாக அமைக்கப்படும் 'ஸ்ட்ராங் ரூம்' மற்றும் கம்ப்யூட்டரில் தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு, தனி குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. ஓட்டுச்சாவடியில் வரும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விவி பேட், கன்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் ஓட்டுச்சாவடியில், பழுதான இயந்திரங்கள் அனைத்தையும் ஒரு குழு சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து, ஸ்ட்ராங் ரூமிற்கு அனுப்பி வைக்கும்.
பெட்டிகள் வைக்கவும் பயிற்சி
ஸ்ட்ராங் ரூமில், ஓட்டுச்சாவடி எண்களுக்கு ஏற்ப வரையப்பட்டுள்ள கட்டத்தில், அதற்குரிய இயந்திரங்களை வைப்பதற்கும், அப்பணியை கண்காணிப்பதற்கும் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
இக்குழுவினருக்கு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவினரும் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டது.
அதன்பின், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பணியாற்றக் கூடிய போலீசார், ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களில் செல்லக்கூடியவர்களை நியமனம் செய்வதற்கு, கம்ப்யூட்டர் முறையிலான குலுக்கல், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து, 'மைக்ரோ அப்சர்வர்'கள் ஆய்வு செய்தனர்.
ஆக, அனைத்தும் தயார். ஓட்டுப்போட வேண்டியதுதான் பாக்கி!

