/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரி மோதியதில் மின்கம்பம் சேதம்
/
லாரி மோதியதில் மின்கம்பம் சேதம்
ADDED : மே 14, 2024 12:35 AM

நெகமம்:நெகமம், தாராபுரம் செல்லும் ரோட்டில், லாரி மோதியதால் மின்கம்பம் சாய்ந்தது.
நெகமம் - தாராபுரம் செல்லும் ரோட்டில், நெகமம் அரசு பள்ளியில் இருந்து சிறிது தூரத்துக்கு ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இந்த ரோட்டில் அதிகளவில் கனரக வாகனங்கள் பயணிக்கிறது.
நேற்று இந்த வழித்தடத்தில், லோடுடன் சென்ற லாரி, ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் மின் கம்பம் சேதம் அடைந்தது. இதனால், மின் கம்பத்தில் இருந்த மின் ஒயர்கள் அறுந்து ரோட்டில் விழுந்தது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அங்கு வந்த மின்வாரியத்துறை ஊழியர்கள், சேதம் அடைந்த கம்பத்திற்கு மாற்றாக புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.