ADDED : மே 26, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு, ஒவ்வொரு ஆண்டும் யானைகள் வலசை செல்கின்றன.
அந்தந்த மாநிலங்கள் சார்பில் நடத்தப்படும் யானைகள் கணக்கெடுப்பால், யானைகளின் உண்மையான எண்ணிக்கை தெரிவதில்லை. இதைக்கருத்தில் கொண்டு, கடந்த 23ம் தேதி வனத்துறை சார்பில் யானைகள் கணக்கெடுப்பு துவங்கியது. நேற்றுடன் நிறைவடைந்தது.
யானைகள் எண்ணிக்கை விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில், 2,961 யானைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.