/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடையில் கழிவு குவிப்பு சுத்தப்படுத்த வலியுறுத்தல்
/
நீரோடையில் கழிவு குவிப்பு சுத்தப்படுத்த வலியுறுத்தல்
நீரோடையில் கழிவு குவிப்பு சுத்தப்படுத்த வலியுறுத்தல்
நீரோடையில் கழிவு குவிப்பு சுத்தப்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஆக 13, 2024 01:40 AM

கிணத்துக்கடவு,;கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டில் உள்ள நீரோடையில், அதிக அளவு பிளாஸ்டிக் கழிவு இருப்பதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டில், மாமாங்கம் நீரோடை உள்ளது. இந்த நீரோடை கோடை காலத்தில் நீர் வற்றி, வறண்ட நிலையில் காணப்பட்டது.
இதனால், குப்பை கொட்டுவது, கோழி இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் பொருட்கள் குவிக்கப்பட்டது. சமூக விரோதிகள் சிலர் காலி மதுப்பாட்டில்களை வீசி வந்தனர்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் ஒன்றிணைந்து, மாமாங்கம் நீரோடையை சுத்தம் செய்தனர்.
மழைப்பொழிவு ஏற்பட்டவுடன், மாமாங்கம் நீரோடை நிரம்பியது. ஆனாலும், பிளாஸ்டிக் கழிவை சிலர் வீசிச்செல்கின்றனர்.
மேலும், ஆர்.எஸ்., ரோட்டில் இருந்து சொலவம்பாளையம் செல்லும் ரோட்டில் தேங்கும் கழிவு நீரானது, இந்த நீரோடையில் கலக்கிறது. இப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை இருப்பதால், மது குடிப்பவர்கள் சிலர் காலி தண்ணீர் பாட்டில்களை ரோட்டின் ஓரத்தில் வீசுகின்றனர். மழைக்கு இந்த பாட்டில்கள் அடித்து வரப்பட்டு நீரோடையில் தேங்குகிறது.
இதனால், இந்த நீரோடையில் பிளாஸ்டிக் கழிவு மிதந்தபடி உள்ளது. இங்கு பொதுச்சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, நீரோடை தண்ணீரில் மிதக்கும் குப்பையை அகற்றம் செய்ய வேண்டும் என, மக்கள் பலர் வலியுறுத்துகின்றனர்.

