/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருக்கையின்றி தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்: உறுதி செய்ய வலியுறுத்தல்
/
இருக்கையின்றி தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்: உறுதி செய்ய வலியுறுத்தல்
இருக்கையின்றி தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்: உறுதி செய்ய வலியுறுத்தல்
இருக்கையின்றி தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்: உறுதி செய்ய வலியுறுத்தல்
ADDED : ஜூன் 09, 2024 11:56 PM
பொள்ளாச்சி:விசேஷ நாட்கள், பண்டிகை கால சிறப்பு அரசு பஸ்கள் இயக்கத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள் கிடைப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது. உறுதிப்படுத்த வேண்டும்.
அரசுப்போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மண்டலங்கள் உள்ளன. இங்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர மற்றும் வெளியூர் பஸ்கள், இயக்கப்படுகின்றன.
அவ்வகையில், பொள்ளாச்சி மார்க்கமாக, பிற கோட்டங்களில் இருந்தும் அதிகப்படியான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்களல், முன்புற மற்றும் பின்புற படிக்கட்டுகளுக்கு அருகே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த இருக்கைகள் ஒட்டிய ஜன்னலின் மேல்புறத்தில், 'மாற்றுத்திறனாளிகள் - முதியோர் இருக்கை' என, அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு, இருக்கையில் விசேஷ நாட்கள், பண்டிகை கால சிறப்பு பஸ்கள் இயக்கத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள் கிடைப்பதில்லை என, புகார் எழுகிறது.
மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது: பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் மார்க்கமாக, பழநி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அதிகப்படியான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பெரும்பாலான பஸ்களில், மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கென இருக்கைகள், முறையாக அவர்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை.
ஆண், பெண் பயணியர் பலரும் ஆக்கிரமித்துக்கொள்ளும் அந்த இருக்கைகளில், முதியோர், மாற்றுத்திறனாளிகளை அமர வைக்க டிரைவர், கண்டக்டர்களும் முனைப்பு காட்டுவதில்லை. இதனால், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நின்று கொண்டே பயணிக்கின்றனர்.
குறிப்பாக, விசேஷ நாட்களில் இத்தகைய நிலை தொடர்கிறது. அவ்வபோது, கிளை மேலாளர்கள், பஸ்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

