/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல் போன் டவரில்தவறி விழுந்த ஊழியர் பலி
/
மொபைல் போன் டவரில்தவறி விழுந்த ஊழியர் பலி
ADDED : மே 03, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:மொபைல் போன் டவரில் ஏறி பழுது பார்த்தபோது தவறி விழுந்து ஊழியர் பலியானார்.
தென்காசியை சேர்ந்த கார்த்திக், 32, என்பவர், கோவையில் தனியார் ஒப்பந்ததாரரிடம் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வந்தார்.
ஆர்.எஸ்.புரம் மேற்கு சம்பந்தம் ரோட்டிலுள்ள கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மொபைல் போன் டவரில் ஏறி, நேற்று பழுது பார்த்த போது, கால் தவறி கட்டடத்தில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார்.
ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.