/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டல்
/
கல்லுாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டல்
ADDED : மார் 09, 2025 11:45 PM

கோவை; காளப்பட்டி, சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ஆங்கிலத் துறை சார்பில், 'வகுப்பறை முதல் வேலைவாய்ப்பு வரை' என்ற கருத்தரங்கு நடந்தது.
சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா ஆகியோர் தலைமை வகித்தனர்.
சென்னையில் உள்ள வெராண்டா ஐ.ஏ.எஸ்., அகாடமி தேர்வுகள் திட்டத் தலைவர் ராஜசேகரன், ஐ.ஏ.எஸ்., தேர்வுகள் அட்டவணை, தேர்வு முறை, பாடத்திட்டம் குறித்து பேசியதுடன், மாணவர்களின் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தார்.
சுகுணா சாரிட்டபிள் டிரஸ்ட் செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், வங்கித் துறைகளில் தேர்வுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
சுகுணா கலை அறிவியல் கல்லுாரியின் இயக்குனர் சேகர், மத்திய அரசின் திட்டங்கள், பெண்களுக்கான இடஒதுக்கீடு, அரசுத் துறையில் வேலைவாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்த கருத்தரங்கில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.