/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர் வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு கலெக்டர் அலுவலகத்தில் புகார்
/
நீர் வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு கலெக்டர் அலுவலகத்தில் புகார்
நீர் வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு கலெக்டர் அலுவலகத்தில் புகார்
நீர் வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு கலெக்டர் அலுவலகத்தில் புகார்
ADDED : ஆக 06, 2024 05:52 AM
அன்னூர்: நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நுகர்வோர் சங்கம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில், அன்னூர் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், அதன் தலைவர் சென்னியப்பன் அளித்த மனு:
கஞ்சப்பள்ளியில் 95 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் உள்ளது. இந்த குளத்திற்கு அன்னூரில் இருந்து வரும் நீர்வழிப் பாதையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த குளத்திற்கு வரும் நீர், குளம் நிரம்பிய பிறகு செங்காளி பாளையம், கருவலூர் வழியாக அவிநாசி என பல குளங்களுக்கு செல்லும். விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
இதேபோல் குளத்தின் வடக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளது. டிஜிட்டல் சர்வே செய்தால் ஆக்கிரமிப்பை கண்டறியலாம். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அன்னூரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் கொண்டு வருவது குறித்து ஆர்.டி.ஓ., பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், தாசில்தார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட முத்தரப்பு கூட்டம் நடத்தி யாருக்கும் பாதிப்பு இல்லாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.