/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒப்புவித்தல் போட்டி; பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
ஒப்புவித்தல் போட்டி; பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : மே 30, 2024 11:33 PM
மேட்டுப்பாளையம்;காரமடை அருகே தாயனூரில் உள்ள திருக்குறள் பேரவை சார்பில் ஒன்பதாவது ஆண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி போரே கவுடர் திருமண மண்டபத்தில் நடந்தது.
பேரவை தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். செயலாளர் பழனிசாமி வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராஜலட்சுமி சாமப்பா கல்வி மற்றும் சமுதாய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஞானசேகரன், அருள்வளர் சிவம் அறக்கட்டளை சாந்தகுமார், தமிழாசிரியர் கோவிந்தராசு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
விழாவில் ஆறாம் வகுப்பு மாணவி நங்கை, ஒன்றாம் வகுப்பு சிறுவன் கோவேந்தன் ஆகியோர் 1330 திருக்குறள்களை மனப்பாடமாக ஒப்புவித்தனர்.
வெள்ளியங்காடு, சீளியூர், புஜங்கனூர் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும், 95 மாணவ, மாணவிகளுக்கு ராஜலட்சுமி சாமப்பா கல்வி அறக்கட்டளை சார்பில், புத்தாடைகளும், ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
விழாவில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.