/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்ஜி., மாணவர் கிரிக்கெட் ஆக., 8ம் தேதி துவக்கம்
/
இன்ஜி., மாணவர் கிரிக்கெட் ஆக., 8ம் தேதி துவக்கம்
ADDED : ஆக 02, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி ஆக., 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது.
வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரியின் உடற்கல்வித்துறை மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 4ம் ஆண்டு எஸ்.ஆர்.இ.சி., அலுமினி கிரிக்கெட் போட்டி கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் கல்லுாரி அணிகள் வரும், 6ம் தேதிக்குள் p@srec.ac.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விவரங்களுக்கு 98421 17374 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.