/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொறியாளருக்கு 'பொறி' லஞ்சம் பெற்றதால் சிறை
/
பொறியாளருக்கு 'பொறி' லஞ்சம் பெற்றதால் சிறை
ADDED : மே 29, 2024 12:51 AM
கோவை;லஞ்சம் பெற்ற வழக்கில், மின்வாரிய பொறியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த தேவராஜ் என்பவர், அவரது வீட்டிற்கு மின் இணைப்பு பெற்றிருந்தார். இந்நிலையில், வீடு அருகில் கூடுதல் மின் கம்பம் நடுவதற்கு, சரவணம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது, மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் ரவீந்திரன், 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில், தேவராஜ் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி, 2012, ஜூலை 5ல், லஞ்ச பணத்தை தேவராஜ் கொடுத்தார். அதை ரவீந்திரன் வாங்கிய போது, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது,கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி மோகனரம்யா, குற்றம் சாட்டப்பட்ட ரவீந்திரனுக்கு, ஓராண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.