/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்சியா சார்பில் பொறியாளர் தினம்
/
காட்சியா சார்பில் பொறியாளர் தினம்
ADDED : செப் 15, 2024 01:43 AM

கோவை: கோவை மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கத்தின் (காட்சியா) சார்பில் பொறியாளர் தினம், காந்திபுரம், ஓட்டல்பார்க் எலான்ஸா அரங்கில் நடந்தது.
காட்சியாவின் தலைவர் விஜயகுமார், மறைந்த பொறியாளர் விசுவேசுவரய்யாவின் திருவுருவப் படத்திற்கு மலர் துாவி, மரியாதை செய்த பின் விழா துவங்கியது.
சங்கத்தின் சார்பாக எமினன்ட் இன்ஜினியர் விருது சங்கத்தின் சார்ட்டர் பிரசிடென்ட் சுரேஷ்குமாருக்கும், கோவை மெடிஸ் ஸ்ட்ரக்சர் நிறுவனர் அருண்குமாருக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சங்கத்தின் சிறந்த இன்ஜினியர் விருது, பொறியாளர்கள் கண்ணன், ரவிச்சந்திரன், பொறியாளர் பிரேம் குமார் பாபு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியுடன் இணைந்து நடத்திய பி.இ., சிவில் மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடித்த கோவை தொழில்நுட்பக் கல்லுாரி, குமரகுரு கல்லுாரி மற்றும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லுாரிகளுக்கு முறையே, ரொக்கப்பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
தொடர்ந்து துணைத் தலைவர் செவ்வேள், செயலாளர் ராஜரத்தினம், துணைச்செயலாளர் பிரேம்குமார் பாபு, துணைப் பொருளாளர் ரவி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.