/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2024 10:45 PM
கோவை:கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பினர் மற்றும் கோவை மண்டல கட்டடப் பொறியாளர் சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்க ஆபரணங்களுக்கு இறக்குமதி வரியை குறைத்ததை போல, கட்டுமானத்துறைக்கு ஜி.எஸ்.டி., யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும், அதிக வேலை வாய்ப்பு தரும், கட்டுமானத்துறைக்கு மத்தியிலும், மாநிலத்திலும், தனி அமைச்சகம் ஏற்படுத்துவதோடு, கட்டுமான பொருள் விலையை நிலையாக நிர்ணயிக்க குழு அமைக்க வேண்டும்.
இன்ஜினியர்களின் பதிவை கட்டாயமாக்குவதோடு, கட்டுமானத்துறையில் இன்ஜினியர்கள் பணியை வரைமுறைப்படுத்த, இன்ஜினியரிங் கவுன்சில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மண்டல பொறியாளர்கள் சங்க தலைவர் ராஜதுரை, 'கிரிக்' அமைப்பு தலைவர் அருள்தாஸ், கொசீனா துணைத் தலைவர் ஜெயவேல், முன்னாள் தலைவர் பிரபாகரன் உட்பட திரளான இன்ஜினியர்கள் பங்கேற்றனர்.