/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு
/
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு
ADDED : ஆக 01, 2024 01:24 AM
கோவை: முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசதியாக, வரும் 7ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் சுயதொழில் கருத்தரங்கு நடக்கிறது.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
முன்னாள் படைவீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு வரும் 7ம் தேதி மாலை 4:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இக்கூட்டத்தில், வங்கி மேலாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் சுயதொழில் மற்றும் கடனுதவி திட்டங்கள் பற்றி விளக்க உள்ளனர்.
சுயவேலை வாய்ப்பு மூலம், தொழில் செய்ய விரும்பும் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவர்கள், இக்கருத்தரங்கில் தவறாமல் பயனடையலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.