ADDED : ஜூன் 09, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;மலுமிச்சம்பட்டி, ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின்,நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து, விதைப்பந்து வழங்கி உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடின.இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, சுமார் 200 விதைப்பந்துகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், வள்ளியம்மை தொண்டு அறக்கட்டளை நிறுவனர் மற்றும் அறங்காவலர் வள்ளியம்மாள், தலைவர் பிரனவ் பிரபு மற்றும் கோவை அலையன்ஸ் கிளப் மண்டலத்தலைவர் ஷியாம் சந்தர், கல்லுாரி முதல்வர் சுப்பிரமணி,நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.