ADDED : ஜூன் 05, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் ரங்கசாமி நாயுடு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தாளாளர் சித்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
