ADDED : ஜூன் 05, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
அன்னுார்: ‘குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும்’ என, கிராம சபை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம், அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் நேற்று நடந்தது. மாவட்ட உதவித்திட்ட அலுவலர் அப்துல் வஹாப், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் ஆகியோர் பங்கேற்றனர். அலுவலர்கள் பேசுகையில், ‘பொதுமக்கள், குப்பையை தரம் பிரித்து தர வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக் கூடாது’ என்றார்.
திடக்கழிவு மேலாண்மை குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
