/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இயற்கையை பாதிக்காத கட்டுமானம் வேண்டும்'
/
'இயற்கையை பாதிக்காத கட்டுமானம் வேண்டும்'
ADDED : செப் 07, 2024 02:36 AM
உலகம் உருவாகி படிப்படியாக நவீனம் அடைந்து, அனைத்து துறைகளும் அசுர வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இயற்கையின் பேரிடர்களால் மிகப்பெரிய அழிவையும், அவ்வப்போது சந்திப்பதும் தவிர்க்க முடியாத ஒன்று.
நிலநடுக்கத்தால் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய ஆபத்தும், சவாலும் ஏற்படுத்துகிறது. பொறியியல் துறை நிலநடுக்கத்தை முன்னரே கண்டுபிடித்து, எச்சரிக்கையூட்டும் விஷயத்தில் எவ்வளது துாரம் முன்னேறியுள்ளது என்பது கேள்விக்குறியே.
நிலநடுக்கத்தால் சீர்குலையாத வகையில் கட்டுமானம் எழுப்புவதற்கு, என்ன விதமான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் நம் முன்னே இருக்கிறது.
பேரழிவுக்குப் பின், நாம் கற்றது என்ன, கடைபிடிப்பது என்ன; ஒன்றும் இல்லை. வழக்கம்போல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என, வேதனை தெரிவிக்கிறார் 'கொசினா' உறுப்பினர்.
'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது:
மனிதர்கள் தோன்றுவதற்கு முன்னர் இருந்த, இயற்கை சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் எது செய்தாலும், அது ஆபத்தை விளைவிக்கும். மனித குலத்தின் அலட்சியத்தால், இதுவரை பூமி எவ்வளவோ மாசு அடைந்துவிட்டது.
சமீபகாலத்தில் பல சோக சம்பவங்களையும், சந்தித்துள்ளோம் என்பதை மறக்க முடியாது. இனியாவது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பயன்படுத்துவோம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம். கழிவுகளை குறைப்போம். மரங்களை அதிகம் வளர்ப்போம்.
குறிப்பாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழிப்போம். வீட்டின் கொல்லைப்புறத்தில் 'ஆர்கானிக்' தோட்டம் அமைத்து பராமரிக்க வேண்டும்.
துணி போன்ற கழிவு பொருட்களை, மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒவ்வொருவரும் முக்கியத்துவம் தரவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.