/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமக்கல்வி எங்கள் உரிமை: பா.ஜ., கையெழுத்து இயக்கம்
/
சமக்கல்வி எங்கள் உரிமை: பா.ஜ., கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 07, 2025 08:10 PM

மேட்டுப்பாளையம்:
சமக்கல்வி எங்கள் உரிமை என்ற பெயரில் மக்கள் விரும்பும் மும்மொழிக்கொள்கை வேண்டும் என ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெரும் நிகழ்வின் ஒரு பகுதி, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பா.ஜ., சார்பில் நடந்தது.
இதில் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் விக்னேஷ், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கையெழுத்து இட்டனர். மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கையெழுத்து பெறப்பட்டது.
பின், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசுப் பள்ளிகளில் உள்ள 52 லட்சம் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தை தவிர வேறு மொழி கற்றுத்தரப்படுவது இல்லை. அவர்கள் கூடுதல் மொழி கற்காமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தை மக்கள் விரோத அரசான தி.மு.க., தடுக்கிறது. இதை முறியடிக்க தான் மும்மொழி வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தேசிய கல்வி திட்டத்தில் இதனை கொண்டு வந்தார்.
தமிழ் என்ற பெயரில் 52 லட்சம் மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், என்றார்.-