/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.எஸ்.ஐ.,- பி.எப்., குறைதீர் கூட்டம்
/
இ.எஸ்.ஐ.,- பி.எப்., குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 24, 2025 11:52 PM
கோவை, ; பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., நிறுவனங்கள் சார்பில், சந்தாதாரர்களின் குறைதீர் கூட்டம், நாடு முழுதும் ஒரே நாளில் நடக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, வரும் 27ம் தேதி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில், பி.எப்., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், இ.எஸ்.ஐ., பயனாளர்கள், தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டோர் குறைகள், பிரச்னைகளைத் தெரிவித்து முறையிடலாம். காலை 10:30 முதல், மதியம் 12:30 மணி வரை கூட்டம் நடக்கும்.
கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் இன்ஜி., கல்லூரி, திருப்பூரில், பி.ஜி.வி., தோட்டம், பி.என்.ரோடு, எஸ்டீ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், நீலகிரியில், கூடலூர் ஜி.எடி.எம்.ஓ., கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில், குறைதீர் கூட்டம் நடக்கிறது. உரிய ஆவணங்களுடன் அணுகலாம்.
பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.
இத்தகவலை, பி.எப்., மண்டல கமிஷனர் வைபவ் சிங் தெரிவித்துள்ளார்.