/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மொபைல்' ரேஷன் கடை துவங்கணும்! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை
/
'மொபைல்' ரேஷன் கடை துவங்கணும்! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை
'மொபைல்' ரேஷன் கடை துவங்கணும்! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை
'மொபைல்' ரேஷன் கடை துவங்கணும்! எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை
ADDED : மார் 04, 2025 11:31 PM
வால்பாறை; யானைகளிடம் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்க, 'மொபைல்' ரேஷன்கடை அமைக்க வேண்டும் என, எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,701 ரேஷன் கார்டுகள் உள்ளன. மொத்தம் உள்ள, 21 வார்டுகளில், 47 ரேஷன் கடைகள் வாயிலாக, மக்களுக்கு அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.
வால்பாறையில் ஆண்டு முழுவதும் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எஸ்டேட் பகுதிக்குள் நள்ளிரவு நேரத்தில் நுழையும் யானைகள், ரேஷன் கடையை குறிவைத்து தாக்குகின்றன.
இதனால், ஆண்டு தோறும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைவதோடு, தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களும் உரிய நேரத்தில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், யானைகள் நடமாடும் எஸ்டேட் பகுதியில், பொருட்களை இருப்பு வைக்க முடியாத நிலையில், மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் குறிப்பிட்ட நாளில் பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஒரே நாளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தவியாய் தவிக்கின்றனர்.
இது குறித்து, எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:
வால்பாறை தாலுகாவில் யானைகள் நடமாடும் எஸ்டேட் பகுதியில், 'மொபைல்' ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் வீதம் மாதத்தில் நான்கு நாட்களாவது எஸ்டேட் பகுதியில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். தொலைதுார பகுதியிலிருந்து வந்து ரேஷன் பொருட்கள் வாங்கி செல்வதால் ஏற்படும் சிரமத்தை குறைக்க, அந்தப்பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.