ADDED : ஏப் 24, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில் உள்ள மூர்த்திகளுக்கு, நாள்தோறும் இரண்டு கால பூஜைகள் நடந்து வருகிறது. காமிக ஆகமப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது.
காலை, 6:00 மணிக்கு, திருவனந்தல், காலை, 7:30 மணிக்கு கால சந்தி, பகல், 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை, 5:00 மணிக்கு சாயரட்சை, இரவு, 7:00 மணிக்கு அர்த்தசாம பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் அம்மனுக்கு இரண்டு கால அபிேஷக பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்படுகிறது.
மேலும், தமிழ் வருட பிறப்பு, வைகாசி விசாகம், ஆடி மாத செவ்வாய், வெள்ளி, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, தீபாவளி, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தனுர் மாதம், தைப்பொங்கல், தைப்பூசம், பங்குனி உத்திரம், மாதாந்திர பவுர்ணமி உள்ளிட்ட உற்சவ காலங்களிலும், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

