/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பார்வை தெரியாவிட்டாலும் 'அடடா' போட வைத்தது குரல்!
/
பார்வை தெரியாவிட்டாலும் 'அடடா' போட வைத்தது குரல்!
ADDED : மார் 09, 2025 11:38 PM

கோவை; சர்வதேச மகளிர் தின விழா பாட்டு போட்டியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் பலர் பங்கேற்று, இனிமையான குரலில் பாடி அசத்தினர்.
கோவையில் தேசிய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்பு மற்றும் ஜாஸ்மின் மெலோடி இசைக்குழு சார்பில், சர்வதேச மகளிர் தினவிழா, வரதராஜபுரத்தில் உள்ள சங்க வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
இதில், பல மாவட்டங்களில் இருந்து, பார்வையற்ற மாற்றுத்திறன் பெண்கள் பங்கேற்றனர். அவர்களின் இசைத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, பாட்டுப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். ஆர்க்கெஸ்ட்ரா இசைக் குழுவினரின், இசைக் கோர்வைக்கு ஏற்ப, இனிமையான குரலில் பக்தி இசைப்பாடல்கள் மற்றும் திரையிசை பாடல்களை பாடி அசத்தினர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மல்லிகா ராஜேந்திரன் கூறுகையில், ''உலக மகளிர் தினத்தை எல்லா ஆண்டும் இங்கும் கொண்டாடுகிறோம். பல போட்டிகளை நடத்தி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறோம்,'' என்றார்.