/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எவரெஸ்ட் மாரத்தான் போட்டி : கோவை வீராங்கனை சாதனை
/
எவரெஸ்ட் மாரத்தான் போட்டி : கோவை வீராங்கனை சாதனை
ADDED : ஜூன் 07, 2024 01:08 AM

கோவை;எவரரெஸ்ட் மாரத்தான் போட்டியில் கோவையை சேர்ந்த வீராங்கனை இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார்.
முன்னாள் மலையேற்ற வீரர்களான டென்சிங் நார்கே மற்றும் சர் எட்மட் ஹிலாரி நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 29ம் தேதி எவரெஸ்ட் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தின் மீது மாரத்தான் நடைபெறுவதால் போட்டி மிகவும் சவாலானது.
இந்த மாரத்தான் போட்டி 21கிமீ., மினி மாரத்தான், 42கிமீ., முழு மாரத்தான் மற்றும் 70கிமீ., எக்ஸ்ட்ரீம் அல்ட்ரா மாரத்தான் என மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனையினர் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த நவ்ஷீன் பானு சந்த், இந்தியா சார்பில் 42 கிமீ., மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.
10 மணி நேரம் 30 நிமிடங்களில் இலக்கை கடந்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் உலக அளவில் 135வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். இதன் மூலம் வரும், நவம்பர் மாதம் காஞ்சன்ஜங்காவில் நடக்கவுள்ள மாரத்தான் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.