/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வலிமையான இந்தியா அமைய ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு அண்ணாமலை அழைப்பு

ADDED : ஏப் 18, 2024 05:34 AM

நீங்கள் விரும்பும் பாரதம் அமைய ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை கோவை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
கோவை வளர வேண்டுமெனில், மோடியின் பிரதிநிதி கோவைக்குத் தேவை எனக்கருதி, மாற்றத்தின் பக்கம் கோவை மக்கள் ஒரு மனதாக நிற்கிறீர்கள். ஆனால், எதிர்க்கட்சியினர் உங்களை ஓட்டுக்காக 1,000 மற்றும் 500 மற்றும் 250 என ஆடு, மாடுகளைப் போல ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கோவை மக்களின் தன்மானத்தைப் பற்றித் தெரியவில்லை.
33 மாதங்களாக ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிட்டு, மாநில அரசு செய்ய வேண்டியவற்றை, கோவைக்கு வாக்குறுதிகளாகக் கொடுத்திருக்கிறது தி.மு.க.,
நாங்கள் 500 நாட்களில், 100 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறியிருக்கிறோம்.நேர்மையான, அறம்சார்ந்த அரசியல் கோவையிலிருந்து துவங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள், கள்ளச்சாராயம், சாராயம், கஞ்சா மூலமாக , மக்களின் உழைப்பைப் பிழிந்து தாங்கள் சம்பாதித்த பணத்தை, கடந்த இரு நாட்களாக நம்மிடம் கொண்டு வந்து குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதை நிராகரித்து, மோடிக்கு நீங்கள் சரித்திர வெற்றியைப் பரிசளிப்பீர்கள் என, நம்புகிறேன். முதல் தலைமுறை வாக்காளர்கள், அனைவரும் ஓட்டுச் சாவடிக்குச் சென்று தவறாமல் ஓட்டுப் போடுங்கள்.
ஒவ்வொரு ஓட்டும் ஜனநாயகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. எக்காரணம் கொண்டும் ஓட்டளிக்காமல் இருந்துவிடாதீர்கள். இவ்வாறு, அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.