/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல்லோரும் தவறாமல் ஓட்டுப்போடுங்கள்!
/
எல்லோரும் தவறாமல் ஓட்டுப்போடுங்கள்!
ADDED : ஏப் 14, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்:சுந்தராபுரம் அருகே கோண்டிஸ் காலனியில், மாவட்ட நிர்வாகம் சார்பில், நூறு சதவீத ஓட்டுப்பதிவிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் தவில், நாதஸ்வர இசையுடன். மயிலாட்டம், காளையாட்டம் மற்றும் காவடியாட்டம் நடந்தன. ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய பனியன், தொப்பி அப்பகுதியினருக்கு வழங்கப்பட்டது.
ஓட்டுப்பதிவு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஓட்டுப்போடுவதன் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகள் பேசினர். இனிப்பு, காரம் வழங்கப்பட்டது. மதுக்கரை தாசில்தார் சத்யன், துணை தாசில்தார் கருணாநிதி, வருவாய் ஆய்வாளர்கள். கிராம நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர்.

