/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் நகரமைப்பு அதிகாரி தற்கொலை
/
முன்னாள் நகரமைப்பு அதிகாரி தற்கொலை
ADDED : ஜூன் 28, 2024 07:33 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில், முன்னாள் நகரமைப்பு அதிகாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கே.கே.நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் அறிவுடைநம்பி,51. இவர் சில ஆண்டுகளுக்கு முன் நீலகிரி மாவட்டம் நெல்லியாலா நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணிபுரிந்தார். பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டு தற்போது வீட்டில் இருந்து வந்தார்.
இவருக்கு கிருஷ்ணவேணி, 45, என்ற மனைவியும், சுபேஷ்,21, என்ற மகனும், 17 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். கிருஷ்ணவேணி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் கிருஷ்ணவேணி பள்ளிக்கு சென்றார். பின், மாலையில் கிருஷ்ணவேணி வீட்டிற்கு வந்து பார்த்த போது, படுக்கை அறையின் விட்டத்தில் அறிவுடைநம்பி, சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட அறிவுடை நம்பி, ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எம்.பி.,க்கள் கனிமொழி, ஆ.ராசா மீது சமூக வலைத்தளங்களில் அவதுாறு பரப்பியதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.--