ADDED : ஆக 10, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
கோவை: அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்(என்.எப்.பி.இ.,) அஞ்சல்–4ன் 65வது கோவை கோட்ட மாநாடு, கூட்ஷெட் ரோட்டில் உள்ள தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது. தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.
ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் சிங்காநல்லுார் போஸ்ட்மேன் முனுசாமி தலைவராகவும், கோவை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் செந்தில்குமார் செயலாளராகவும், பேரூர் போஸ்ட்மேன் வெங்கட்ராமன் பொருளாராகவும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
