/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளியுங்க!

ADDED : மார் 24, 2024 11:59 PM
பொள்ளாச்சி;தேர்தல் பணிகளில் இருந்து கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், லோக்சபா தேர்தல் ஏப்.,19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு தேவைப்படும், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், கலெக்டர் அலுவலகத்தில் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஆசிரியர்கள் பலர் ஆட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், விலக்கு அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும், என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறன் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
நேரில் வர இயலாதவர்களுக்கு, அவர்களின் சார்பில் அவர்களின் குடும்பத்தினர் சான்றிதழ்களை சமர்ப்பிக்க அனுமதித்தால், உதவியாக இருக்கும்' என்றார்.