/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறிமுதல் செய்ததில் ரூ.25 லட்சம் விடுவிப்பு
/
பறிமுதல் செய்ததில் ரூ.25 லட்சம் விடுவிப்பு
ADDED : மார் 23, 2024 01:57 AM
கோவை;தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த, 20ம் தேதி வரை, 61 வழக்குகள் பதிவு செய்து, ஒரு கோடியே, 59 லட்சத்து, ஒன்பதாயிரத்து, 200 ரூபாய் பறிமுதல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் (21ம் தேதி), 11 வழக்குகள் பதிவு செய்து, எட்டு லட்சத்து, 91 ஆயிரத்து, 900 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
மொத்தமாக, 72 வழக்குகள் பதிவாகி, ஒரு கோடியே, 68 லட்சத்து, ஆயிரத்து, 100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதில், ஆறு பேர் மேல்முறையீடு செய்து, 25 லட்சத்து, நான்காயிரத்து, 350 ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ள, 66 வழக்குகளுக்கான தொகையான, ஒரு கோடியே, 42 லட்சத்து, 96 ஆயிரத்து, 750 ரூபாய், கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவை தவிர, சூலுார் பகுதியில், 56 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 440 கிராம் கஞ்சா சிக்கியிருக்கிறது. கோவை வடக்கு தொகுதியில், 25 குவார்ட்டர் மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

