/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெரைட்டியான புதிய மாடல் பர்னிச்சர் வாங்க கண்காட்சி
/
வெரைட்டியான புதிய மாடல் பர்னிச்சர் வாங்க கண்காட்சி
வெரைட்டியான புதிய மாடல் பர்னிச்சர் வாங்க கண்காட்சி
வெரைட்டியான புதிய மாடல் பர்னிச்சர் வாங்க கண்காட்சி
ADDED : ஏப் 27, 2024 02:02 AM

கோவை;கோவை கொடிசியா வணிக வளாகத்தில், பிரம்மாண்டமான பர்னிச்சர் கண்காட்சி நேற்று துவங்கியது.
தமிழகத்தில் உள்ள 70க்கும் மேற்பட்ட முன்னணி பர்னிச்சர் நிறுவனங்கள், தங்களின் நவீன மாடல் பர்னிச்சரை விற்பனைக்கு வைத்துள்ளனர். சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எளிதான தவணை முறையிலும் வாங்கலாம்.
கண்காட்சி குறித்து டிவைன் பர்னிச்சர் விற்பனை மேலாளர் பிரோஸ் கூறுகையில், ''பர்னிச்சர் வாங்க ஷோரூம்களுக்கு சென்றால், நாம் நினைப்பது மாதிரி வெரைட்டியான மாடல்களில் கிடைக்காது. இது போன்ற கண்காட்சிகளில், அதிக மாடல்களில் கிடைக்கும். பல மாவட்டங்களில் இருந்து பர்னிச்சர் விற்பனையாளர்கள் வந்து ஸ்டால்கள் அமைத்துள்ளனர். தரமான பொருட்களை விலை குறைவாக இங்கு வாங்கலாம்,'' என்றார்.
இந்த கண்காட்சி, வரும் 29ம் தேதி வரை காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது.

