/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விரிவுபடுத்தப்பட்ட வி.ஜி.எம்., மருத்துவமனை 16ம் தேதி திறப்பு
/
விரிவுபடுத்தப்பட்ட வி.ஜி.எம்., மருத்துவமனை 16ம் தேதி திறப்பு
விரிவுபடுத்தப்பட்ட வி.ஜி.எம்., மருத்துவமனை 16ம் தேதி திறப்பு
விரிவுபடுத்தப்பட்ட வி.ஜி.எம்., மருத்துவமனை 16ம் தேதி திறப்பு
ADDED : மார் 15, 2025 12:08 AM
கோவை; கடந்த, 2009ம் ஆண்டு கோவை சிங்காநல்லுாரில் 40 படுக்கைகளுடன் வி.ஜி.எம்.,மருத்துவமனை துவங்கப்பட்டது. தற்போது,20 மருத்துவ சிறப்பு பிரிவுகளுடன், 150 படுக்கை வசதியுடன் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கல்லீரல் மற்றும் சிறுநீரக சிகிச்சைகளுக்கான, ஆறு தளத்துடன் புதிய கட்டடம் பல்வேறு நவீன வசதியுடன் திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து, வி.ஜி.எம்., மருத்துவமனை நிறுவனர் மோகன் பிரசாத் கூறியதாவது:
தற்போது, 20, 30 வயதிலேயே கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களை காணமுடிகிறது.
உடல் பருமன், சர்க்கரை, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளவர்களும் பரிசோதித்துக்கொள்ளவேண்டும்.
கல்லீரல் பாதிப்பு ஆல்ஹகால் பயன்பாடு காரணமாக, 43 சதவீதமும், உடல் பருமன் காரணமாக 20 சதவீதமும் பதிவாகியுள்ளது. தற்போது, கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை, இருதயவியல் கேத் லேப், பிரத்யேக கல்லீரல் ஐ.சி.யூ., டயாலிசஸ், கதிரியக்கவியல் உள்ளிட்ட நவீன சிகிச்சை வசதிகளுடன் பிரத்யேக கட்டடம் நாளை திறக்கவுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிகழ்வில், எண்டோஸ்கோப்பி துறை இயக்குனர் மதுரா, டாக்டர் வம்சி மூர்த்தி, ஆர்த்தோ பிரிவு டாக்டர் சுமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.