/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்க்கெட் ரோட்டை விரிவுபடுத்த எதிர்பார்ப்பு
/
மார்க்கெட் ரோட்டை விரிவுபடுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 16, 2024 11:29 PM
வால்பாறை;வால்பாறை மார்க்கெட் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரின் மத்தியில் புதுமார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு நகராட்சிக்கு சொந்தமான, 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
வாரம் தோறும் சந்தை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், மக்கள் கூட்டம் மார்க்கெட் பகுதியில் அலைமோதும். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மார்க்கெட் பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து இருபுறமும் கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமலும், மக்கள் நிம்மதியாக நடந்து செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் பூமார்க்கெட் முதல் மீன் மார்க்கெட் வரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும். ரோட்டை விரிவுபடுத்தி வாகனங்கள் சென்று வர வசதி ஏற்படுத்த வேண்டும்,' என்றனர்.