/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாறல் மழைக்கு எதிர்பார்ப்பு; வேளாண் பல்கலை கணிப்பு
/
துாறல் மழைக்கு எதிர்பார்ப்பு; வேளாண் பல்கலை கணிப்பு
துாறல் மழைக்கு எதிர்பார்ப்பு; வேளாண் பல்கலை கணிப்பு
துாறல் மழைக்கு எதிர்பார்ப்பு; வேளாண் பல்கலை கணிப்பு
ADDED : ஆக 07, 2024 11:07 PM
கோவை: கோவை மாவட்டத்தில், வரும் நான்கு நாட்களில் லேசான துாறல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. காற்றின் வேகம், மணிக்கு 8-22 கி.மீ., வரை வீசக்கூடும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மழை எதிர்பார்க்கப்படுவதால், சமீபத்தில் நடவு செய்த நெல் வயலில் போதிய வடிகால் வசதி மேற்கொள்ள வேண்டும். அதிக பட்சமாக பகலில், 3-32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக இரவில் 20-21 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவும்.
ஆடிப்பட்டம் கொடிவகை பயிர்களான பீர்க்கங்காய், பாவற்காய், புடலைங்காய், போன்ற பயிர்களை விதைப்பதற்கு உகந்தகாலம் இதுவாகும். காற்றின் வேகம் அதிகம் காணப்படுவதால், கரும்பு, வாழை பயிர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலவும் வானிலையால், கால்நடைகளுக்கு கோமாரி நோய்க்கு சாதகமாக உள்ளதால், கறவை மாடு மற்றும் உழவு மாடுகளில், வாய் மற்றும் கால் குளம்புகளை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.