/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மே மாதத்திற்கான துவரம் பருப்பு வழங்க பொது மக்கள் எதிர்பார்ப்பு
/
மே மாதத்திற்கான துவரம் பருப்பு வழங்க பொது மக்கள் எதிர்பார்ப்பு
மே மாதத்திற்கான துவரம் பருப்பு வழங்க பொது மக்கள் எதிர்பார்ப்பு
மே மாதத்திற்கான துவரம் பருப்பு வழங்க பொது மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 12, 2024 10:34 PM
கோவை : தட்டுப்பாடு காரணமாக வழங்கப்படாத, மே மாதத்திற்கான துவரம் பருப்பை விரைவில் வழங்க வேண்டும் என்ற, எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
கோவை மாவட்டத்தில், 1530 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 11.43 லட்சம் பயனாளிகள் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பலர் மே, மாதத்திற்கான பருப்பு, பாமாயில் வாங்கவில்லை.
இந்நிலையில், மே மாதம் பெறாதவர்கள் பருப்பு மற்றும் பாமாயிலை இரட்டிப்பாக, ஜூன் முதல் வாரம் வரை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.
அதன் படி, பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், போதுமான 'சப்ளை' இல்லாத காரணத்தால், பல இடங்களில் ஒரு மாதத்திற்கான பருப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே மாதத்திற்கான துவரம் பருப்பை, விரைவில் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'சில தினங்களுக்கு முன், கோவைக்கு வந்த 200 டன் துவரம் பருப்பு தரம் இல்லாததால், மாவட்ட வழங்கல் துறையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
இன்னும் சில தினங்களில், கோவைக்கு 300 டன் துவரம் பருப்பு வர வேண்டியுள்ளது. வந்தவுடன் பொது மக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். மே மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயில், இம்மாதம் கடைசி வரை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள முடியும், என்கின்றனர் அதிகாரிகள்.

