/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாட்டு சர்க்கரை தயாரிப்பு மாணவர்களுக்கு விளக்கம்
/
நாட்டு சர்க்கரை தயாரிப்பு மாணவர்களுக்கு விளக்கம்
ADDED : மே 17, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;தமிழ்நாடு வேளாண் பல்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள், வேளாண் அனுபவ பயிற்சியின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி, அம்பராம்பாளையத்தில் நாட்டு சர்க்கரை ஆலையை பார்வையிட்டனர்.
அங்கு, நாட்டு சர்க்கரை, மண்டை வெல்லம் தயாரிப்பு குறித்து பயிற்சி பெற்றனர். சர்க்கரை ஆலை உரிமையாளர் ரத்தினசாமி, மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
மேலும், பாரம்பரிய நெல் வகைகளான கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா மற்றும் சாமை, தினை, குதிரைவாலி, ராகி, மூங்கில் கரும்பு ஆகியவற்றின் நன்மைகள் குறித்து கேட்டறிந்தனர்.

