/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை டானிக் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
/
தென்னை டானிக் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
ADDED : ஏப் 16, 2024 11:23 PM
பொள்ளாச்சி;ஊரக வேளாண் அனுபவ பயிற்சிக்காக, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை நான்காம் ஆண்டு மாணவியர், ஆழியாறு வந்துள்ளனர். அவர்கள், விவசாயிகளிடம் அனுபவங்களை கேட்டறிவதுடன், செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் சுதாலட்சுமி மேற்பார்வையில் பயிற்சி பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, டி.என்.ஏ.யு., எனும் தென்னை 'டானிக்' பயன்படுத்த வேண்டும் என, மாணவியர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
தென்னை டானிக் நோய் எதிர்ப்பு சக்தி தரக் கூடியது. இம்மருந்தை வேர் வாயிலாக, தென்னை மரத்துக்கு செலுத்த வேண்டும். ஒரு மரத்துக்கு, 40 மி.லி., தென்னை டானிக் மற்றும் 160 மி.லி., தண்ணீர் கலந்து, 200 மி.லி., வீதம் அளிக்க வேண்டும். இம்மருந்து, 24 மணி நேரத்திற்குள் உறிஞ்சப்பட்டிருக்க வேண்டும், என, செயல்முறை விளக்கம் அளித்தனர்.

