ADDED : மே 23, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை–சென்னை சென்ட்ரல் இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
கோடை விடுமுறையையொட்டி பயணிகள் வசதிக்காக ‘ஏசி சேர் கார்’ ஒன்று தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்–கோவை இடையே(12243/44) இயக்கப்படும் ரயில்களில் வரும் ஜூலை 6 வரை இப்பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
