/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சி அலுவலகங்களில் புகார் தெரிவிக்க வசதி
/
ஊராட்சி அலுவலகங்களில் புகார் தெரிவிக்க வசதி
ADDED : பிப் 24, 2025 10:02 PM
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சித் தலைவர்கள் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயல் அலுவலர்கள் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், பொதுமக்கள் புகார் தெரிவிக்க தகவல் பலகை வைத்து, அதில் மொபைல்போன் நம்பர் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, கிணத்துக்கடவுக்கு உட்பட்ட ஊராட்சி அலுவலகங்களில், அடிப்படை வசதிகள் மற்றும் பிரச்னைகளை ஒன்றிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதில், ஊராட்சி செயல் அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் என, மூன்று பேரின் மொபைல்போன் எண்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு, மக்கள் பொது பிரச்னைகளை தெரிவிக்கலாம், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

