/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் பணிபுரியும் இடங்களில் உள்புகார் கமிட்டி அமைக்க தவறினால் ரூ.50 ஆயிரம் அபராதம்
/
மகளிர் பணிபுரியும் இடங்களில் உள்புகார் கமிட்டி அமைக்க தவறினால் ரூ.50 ஆயிரம் அபராதம்
மகளிர் பணிபுரியும் இடங்களில் உள்புகார் கமிட்டி அமைக்க தவறினால் ரூ.50 ஆயிரம் அபராதம்
மகளிர் பணிபுரியும் இடங்களில் உள்புகார் கமிட்டி அமைக்க தவறினால் ரூ.50 ஆயிரம் அபராதம்
ADDED : மார் 03, 2025 03:49 AM
கோவை : பத்துக்கும் மேற்பட்ட மகளிர் பணிபுரியும் அலுவலகங்களில், உள் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என்று, கோவை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கலெக்டர் பவன்குமார் அறிக்கை:
பணிபுரியும் இடங்களில் மகளிர் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம், 2013ம் ஆண்டு மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது.
இச்சட்டத்தின்படி, பத்து நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், அதன் கிளை நிறுவனங்கள் என அனைத்திலும், தனித்தனியான உள் புகார் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இது, ஐந்து உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். உள் புகார் குழு தலைவராக, பெண் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.
இக்குழுவில், 50 சதவீத உறுப்பினர்கள் பெண்களாகவும், ஒரு உறுப்பினர் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம் பற்றி நன்கு அறிந்தவராகவோ, தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.
இதுவரை உள் புகார் குழு அமைக்காத நிறுவனங்கள், உடனடியாக அமைத்து அந்த தகவலை மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்துக்கு, அனுப்பி வைக்க வேண்டும்.
உள்புகார் குழு அமைக்காத நிறுவனங்களின் மீது, பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடை சட்டம், 2013ன் கீழ் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
உள்புகார் குழு அமைத்துள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும் டிச.,இறுதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்துக்கு, ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.