/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணம் கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்; போலி நிருபர், அவரது மகனுக்கு சிறை
/
பணம் கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்; போலி நிருபர், அவரது மகனுக்கு சிறை
பணம் கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்; போலி நிருபர், அவரது மகனுக்கு சிறை
பணம் கேட்டு பெண்ணுக்கு மிரட்டல்; போலி நிருபர், அவரது மகனுக்கு சிறை
ADDED : மார் 11, 2025 05:44 AM

கோவை : பெண்ணை மிரட்டி பணம் கேட்ட போலி நிருபர் மற்றும் அவரது மகனை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை துடியலுாரை சேர்ந்தவர் 36 வயது பெண். இட்லி, தோசை மாவு அரைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த பிப்., 19ம் தேதி வீட்டின் அருகே உள்ள வாடிக்கையாளருக்கு மாவு விற்பனை செய்து விட்டு வந்தார்.
அப்போது பைக்கில் வந்த நந்தகுமார் என்பவரின் மகன் அபிஷேக், 21 அவருடன் வந்த மற்றொருவர், ஒரு மொபைல் போனை அளித்து, பேச அறிவுறுத்தினர்.
மறுமுனையில் பேசியவர், தனது பெயர் நிருபர் நந்தகுமார் என்றும், ரேஷன் அரிசியில் மாவு அரைத்து விற்பது குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.
பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்நிலையில், அபிஷேக் மற்றும் அவருடன் வந்தவர், பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்ததால், அங்கிருந்து இருவரும் சென்றனர்.
நடந்த சம்பவங்களை பெண்ணின் உறவினர் ஒருவர், வீடியோ எடுத்துள்ளார். அப்பெண் துடியலுார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் போலி நிருபர் நந்தகுமார், அபிஷேக் ஆகியோரை சிறையில் அடைத்தனர்.