தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூன்றாவது நாளாக விவசாயி தொடர் உண்ணாவிரதம்

மூன்றாவது நாளாக விவசாயி தொடர் உண்ணாவிரதம்

மூன்றாவது நாளாக விவசாயி தொடர் உண்ணாவிரதம்


ADDED : ஜூலை 23, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, நெ.10.முத்துாரில், விவசாயி மூன்றாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிணத்துக்கடவு, நெ.10.முத்துாரில் உள்ள விவசாயி முருகானந்தம் என்பவர், சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது, 3 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட மனுவிற்கு, எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார்.

3ஆம் நாளான நேற்றும் உண்ணாவிரதம் இருந்தார். இவருக்கு ஏற்கனவே விவசாயிகள் சிலர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்தப்போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கிணத்துக்கடவு சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விவசாயி முருகானந்தம் கூறியதாவது: கிணத்துக்கடவு வருவாய்த்துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில், 3 ஆண்டு மனுவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டுள்ளோம். மேலும், இந்த விதிமீறல் குறித்து, தலைமை செயலகம் வரை தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.

விதி மீறிய குவாரிக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை, சமரசத்திற்கு இடமில்லை என்று வருவாய்த்துறையினரிடம் தெரிவித்தோம். மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து பேசி தகவல் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us