ADDED : ஜூலை 23, 2026 05:22 PM
வழிப்பறி செய்தவர் கைது குனியமுத்துார் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் காதர் மொஹிதீன், 54; ஆம்புலன்ஸ் ஓட்டுநர். நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் சென்ற போது, இயற்கை உபாதைக்காக வாகனத்தை நிறுத்தினார். அப்போது பைக்கில் வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த, ரூ.10,300ஐ பறித்து தப்பினர். புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் ராமநாதபுரத்தை சேர்ந்த அப்சல், 22, போத்தனுாரை சேர்ந்த காட்வின் கிங்ஸ், 22 ஆகியோரை கைது செய்தனர்.
மணல் கடத்தல்; லாரி பறிமுதல் புவியியல், கனிமவளத்துறையினர் சரவணம்பட்டி – துடியலுார் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். முறையான அனுமதியின்றி 4 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை நிறுத்தினர். லாரி டிரைவர் தப்பினார். மணல் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முகவரி கேட்பது போல் மொபைல் பறிப்பு பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தியானேஸ்வரன், 19 பைக்கில் துடியலுார்– மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத மூவர் முகவரி கேட்பது போல் அவரது மொபைலை பறித்து கொண்டு தப்பினர். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மூத்தோருக்கு இல்லம் கட்டி தருவதாக மோசடி சென்னையை சேர்ந்த, கார்த்திகேயன் என்பவரிடம், கோவை இ.எஸ்.ஆர்., அப்பாட்மெண்ட்ஸ் என்ற பெயரில், நான்கு பேர் அணுகியுள்ளனர். பொள்ளாச்சி நெகமம் பகுதியில், மூத்த குடிமக்களுக்கான வீடு கட்டுவதாக கூறி, 2022 ல் ரூ.33 லட்சம் பெற்றனர். தற்போது வரை வீடு கட்டித்தரவில்லை, பணமும் கொடுக்கவில்லை. கார்த்திகேயன் புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார், ராஜ் கிஷோர், சாய்லதா கிஷோர், ஆதித்யா ராஜ், சவிதா பாலகோபால் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்பனை; ஐந்து வழக்குகள் பதிவு
ராமநாதபுரம், சிங்காநல்லுார், பீளமேடு, போலீசார் சோதனையில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புலியகுளம் சேர்ந்த ஐயப்பதாஸ், 37 ஒண்டிபுதுாரை சேர்ந்த புஷ்பலதா, 53 மற்றும் பாலசுந்தரம், 57 பாப்பம்பட்டியை சேர்ந்த முத்துகுட்டி, 30, சின்னியம்பாளையத்தை சேர்ந்த அருண்ராஜ், 28 ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்பனை; மூன்று பேர் கைது பெரியகடை வீதி போலீசார் சோதனையில் பொன்னையராஜபுரத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற மூவர் 4.100 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. ராஜஸ்தானை சேர்ந்த நரேந்திரகுமார், 25 உத்திரபிரதேஷத்தை சேர்ந்த லவகுஷ் பதாக், 25 தெலுங்கு வீதியை சேர்ந்த சுரேந்திர சிங், 29 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா, ரூ.4500 பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா விற்றவர் குண்டாசில் கைது பேரூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை நடத்திய போது, கஞ்சா விற்ற கேரள மாநிலத்தை சேர்ந்த பிஜு,61 என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி., மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில், பிஜுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
