/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலாற்றில் புது வெள்ளம் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
/
பாலாற்றில் புது வெள்ளம் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் புது வெள்ளம் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் புது வெள்ளம் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஆக 26, 2024 01:29 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, பாலாற்றில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான மாவடப்பு, திருமூர்த்தி மலைப்பகுதிகளில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கி பாய்கிறது பாலாறு.அர்த்தநாரிபாளையம், கம்பாலபட்டி, மஞ்சநாயக்கனுார், துறையூர், கரியாஞ்செட்டிபாளையம் வழியாக பயணித்து, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் வழியாக, ஆழியாறு ஆற்றில் கலக்கிறது. அதன்பின், அது கேரளாவுக்கு பயணித்து பாரதப்புழா ஆற்றில் சங்கமிக்கிறது.
கடந்தாண்டு பெய்த தொடர் மழை காரணமாக, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது; குடிநீர் தட்டுப்பாடின்றி இருந்தது. இந்தாண்டும், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக திருமூர்த்தி மலை மற்றும் பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகள், மேற்குத்தொடர்ச்சி மலையில், தொடர் மழை பெய்கிறது.
இதனால், வனப்பகுதிகளில் ஆங்காங்கே சிறு ஓடைகள் போல தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. காட்டாற்று வெள்ளம், பாலாற்றில் வழிந்தோடுவதால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

