/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செண்டு மல்லி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்
/
செண்டு மல்லி வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : பிப் 24, 2025 11:00 PM

மேட்டுப்பாளையம், ; மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் செண்டு மல்லி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள வெள்ளியங்காடு, தாயனூர், தேரம்பாளையம், சம்பரவள்ளி, சிறுமுகை, காரமடை, திம்மம்பாளையம், தோலம்பாளையம் ஆகிய பகுதிகளில் செண்டு மல்லி பூ விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செண்டு மல்லி போலவே பட்டன் ரோஸ், கோழிக்கொண்டை, சம்மங்கி, ஜாதிப் பூ, மல்லிகை பூ உள்ளிட்ட மலர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு உற்பத்தியாகும் பூக்கள் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கோவை பூ மார்க்கெட்டிற்கு வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்யும் பூக்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பூ விவசாயத்தில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக செண்டுமல்லி பூக்களை அதிக அளவு விவசாயம் செய்து வருகின்றனர்.
முகூர்த்த தினங்களில் செண்டுமல்லி ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை ஆகிறது.
சாதாரண நாட்களில் செண்டுமல்லி ஒரு கிலோ ரூ.30ல் இருந்து ரூ.50 வரை விற்பனை ஆகின்றது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், செண்டு மல்லி பூ சாகுபடிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை. 3 மாதத்தில் பூக்கள் பூக்க துவங்கும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சுமார் 100 கிலோ வரை செண்டு மல்லி பூ அனுப்பப்படுகிறது, என்றனர்.