/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயிற்சியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிற்சியில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 12, 2024 10:55 PM
அன்னுார்;கோவை, ஈஷா அவுட் ரீச் மற்றும் அன்னுார் மன்னீஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், ஒருங்கிணைந்த வாழை சாகுபடி குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நாளை (14ம் தேதி) காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை அன்னுார் யு.ஜி. மகாலில் நடைபெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சிறப்பு வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய உர மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளனர்,
எனவே அன்னுார் மற்றும் சூலூர் வட்டார விவசாயிகள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம். அன்னுார் விவசாயிகள் 93601 82979 மொபைலுக்கும், சூலூர் விவசாயிகள் 89254 25345 என்னும் மொபைல் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.