/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த 'நெல் ரீப்' பயிர் பூஸ்டர் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
/
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த 'நெல் ரீப்' பயிர் பூஸ்டர் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த 'நெல் ரீப்' பயிர் பூஸ்டர் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த 'நெல் ரீப்' பயிர் பூஸ்டர் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ADDED : மே 24, 2024 01:28 AM
கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள பயிர் வினையியல் துறை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த 'நெல் ரீப்' என்ற பயிர் பூஸ்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, வேளாண் பல்கலை பயிர் வினையியல் துறை தலைவர் செந்தில் கூறியதாவது:
வறட்சி, வெப்பநிலை அதிகரித்தல், நிலத்தடி நீரின் உப்புத்தன்மை போன்ற காரணங்களால் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து வருகிறது. இதற்கு, நுண்ணுாட்டச்சத்து குறைபாடு, அதனுடன் கூடிய பயிர் வினையூக்கிகளின் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ளது.
இந்த பாதிப்பை நிவர்த்தி செய்ய, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் உள்ள பயிர் வினையியல் துறையானது, ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த 'நெல் ரீப்' என்ற பயிர் பூஸ்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதை உரிய பருவத்தில் நெற்பயிருக்கு தெளிப்பதன் வாயிலாக, ஊட்டச்சத்து பற்றாக்குறை, ஹார்மோன்கள் மற்றும் வினையியல் சார்ந்த குறைபாடுகள் உண்டாவது தடுக்கப்படுவது மட்டுமல்லாமல், பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துகள் உரிய நேரத்தில் கிடைத்து, அதிக மகசூல் பெற வழிவகுக்கிறது.
நெற்பயிருக்கு வறட்சி மற்றும் உயர் வெப்பத்தை தாங்கும் திறனையும் அளிக்கிறது. ஏக்கருக்கு மூன்று கிலோ என்ற அளவில் இருமுறை இலை வழியாக தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் வாயிலாக, நெற்பயிரின் விளைச்சல் 15 சதம் வரை அதிகரிக்கலாம்.
இந்த பயிர் பூஸ்டர்கள், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பயிர் வினையியல் துறையில் கிடைக்கும். விவசாயிகள் நேரடியாகவோ அல்லது பார்சல் சேவையை பயன்படுத்தியோ பெற முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
விபரங்களுக்கு: 0422 - 6611243.