/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாயிகளின் விபரம் பதிவேற்றம் : 31ம் தேதி வரை நீட்டிப்பு
/
விவசாயிகளின் விபரம் பதிவேற்றம் : 31ம் தேதி வரை நீட்டிப்பு
விவசாயிகளின் விபரம் பதிவேற்றம் : 31ம் தேதி வரை நீட்டிப்பு
விவசாயிகளின் விபரம் பதிவேற்றம் : 31ம் தேதி வரை நீட்டிப்பு
ADDED : மார் 04, 2025 12:25 AM
சூலுார்:
விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றும் பணி, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து திட்டங்களின் பயன்களை எளிமையாகவும், விரைவாகவும் விவசாயிகள் பெற, அவர்களின் நிலம் குறித்த விபரங்கள் சேகரித்து, தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி நடந்து வருகிறது. சூலுார் மற்றும் சுல்தான்பேட்டையில், கடந்த, 10ம் தேதி முதல் இப்பணி நடக்கிறது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்க, தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. ஆதார் எண், பட்டா விபரம், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றுடன் சென்று அந்தந்த ஊர்களில் நடக்கும் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். அருகில் உள்ள அரசு பொது இ.சேவை மையத்திலும் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம். வரும், 31ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.